iQOO Neo 9 Pro: இந்தியாவில் வெளியாகும் iQOO Neo 9 Pro... சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!
iQOO நிறுவனத்தின் Neo 9 Pro மொபைல் இந்தியாவில் வெளியாகும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16, புதுடெல்லி (New Delhi): iQOO நிறுவனத்தின் Neo 9 Pro மொபைல் இந்தியாவில் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலானது ஆண்ட்ராய்டு 14 OS ல் இயங்கும். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் உடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 6.'78 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. Virat Kohli Receives Invitation for Ram Mandir Pranpratishtha: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு..!
iQOO Neo 9 Proவின் சிறப்பம்சங்கள்: இந்த மொபைலின் ரியர் கேமரா யூனிட், 50MP Sony IMX920 OIS main + 8MP (ultrawide) மற்றும் செல்பி கேமரா 16MP ஆகும். மேலும் 5,160 mAh பேட்டரி திறன் கொண்டது. இந்த மொபைலின் பேஸிக் ஸ்டோரேஜ் வேரியண்ட் 256 GB ல் இருந்து ஆரம்பிக்கும் என்றும் அதன் விலை ரூ.26,000 முதல் ஆரம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 05:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

