Threads New Feature Update: பயனர்கள் தங்களின் திரெட்ஸ் கணக்கை நீக்குவது எப்படி?.. விபரம் அறிவிப்பு..!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி, பல கட்டுப்பாடுகளை பயனர்களுக்கு விதித்த காரணத்தால், பேஸ்புக் உரிமையாளரால் திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

Threads App (Photo Credit: Pexels)

நவம்பர் 14, புதுடெல்லி (Technology News): பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் ஆகிய செயலிகளை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம், தனது திரெட்ஸ் பயனர்களுக்கு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி, பல கட்டுப்பாடுகளை பயனர்களுக்கு விதித்த காரணத்தால், அவருக்கு கண்டனங்கள் குவித்து வந்தது. பலரும் ட்விட்டருக்கு மாற்றாக செயலி வந்தால், அதனை பலரும் பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள் என கூறிவந்தனர்.

இதனை தனக்கு சாதகமாக்கிய மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க், திரெட்ஸ் எனப்படும் செயலியை அறிமுகம் செய்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தபடி, அதனை எளிதில் லாகின் செய்து உபயோகம் செய்யவும் வசதிகள் வழங்கப்பட்டன. Death Sentence in Aluva Rape-Murder Case: 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை: குற்றவாளிக்கு உச்சபட்சமாக மரண தண்டனை.. நீதிபதி அதிரடி.! 

இந்நிலையில், திரெட்ஸ் பயனர்கள் தங்களின் திரெட்ஸ் பக்கத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் உதவி இன்றி நீக்க இயலும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூத்த நிர்வாகி ஆடம் மெஸ்ஸேரி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

திரேட்ஸில் பயனர்கள் தங்களின் Profile-க்குள் சென்று Settings பக்கத்தில், கணக்கை நீக்கலாம். நிரந்தரமாக திரெட்ஸ் கணக்கை நீக்க விரும்பாதவர்கள், தற்காலிகமாக செயலிழப்பு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 100 மில்லியன் பயனர்களை கடந்து திரெட்ஸ் தற்போது இயங்கி வருகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement