WhatsApp Verification Tick: வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்.. சரிபார்ப்பு பேட்ஜை பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு மாற்ற முடிவு..!
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் சரிபார்ப்பு பேட்ஜை பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாற்றம் செய்யவுள்ளது.
ஆகஸ்ட் 09, சென்னை (Technology News): உலகின் பிரபலமான செயலியான வாட்ஸ்அப் சில முக்கிய மாற்றங்களை அதில் செய்துள்ளது. வாட்ஸ்அப் சேனல் (WhatsApp Channel) மற்றும் பிஸ்னஸ் (Business) கணக்கு சரிபார்ப்பு டிக் நிறம் இதுவரை பச்சை நிறத்தில் இருந்த நிலையில், அதை நீல நிறத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. Google Doodle Today: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024; இன்றைய அசத்தல் கூகுள் டூடுல் இதோ.!
இதன் மூலம், மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளுக்கான சரிபார்ப்பு டிக் நீல நிறத்தில் காணப்படும். இதனால் வாட்ஸ்அப் பயனரின் அனுபவத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும். மேலும், இதுகுறித்த அப்டேட் விரைவில் வரும். இந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயனர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்வதற்கான வாய்ப்புகளை குறைக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 09, 2024 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

