அக்டோபர் 26, வாஷிங்க்டன் டிசி (Technology News): வானியல் தொடர்பான ஆய்வுகளில் நாம் தினமும் புதுப்புது கிரகங்கள், விண்மீன் திரள்களை கண்டறிந்து வருகிறோம்.
இது பிரபஞ்சத்தில் பூமி மட்டும் தனித்து விடப்படவில்லை, நம்மைப்போல கிரகமும், கோள்களும் உள்ளன என்பதை உறுதி செய்கிறது. நாம் வசித்து வரும் பூமி தன்னகத்தே பல ஆச்சரியங்களை கொண்டுள்ளது போல, விண்வெளியிலும் பல எண்ணற்ற வியப்பூட்டும் விஷயங்களை கொண்டவை.
நாம் வாழும் பால்வழி அண்டம் போல, பல பால்வழி அண்டங்கள், கிரகங்கள், நட்சத்திர கூட்டங்கள் விண்வெளியில் இருக்கின்றன. இவை பூமியிலிருந்து நெடுந்தூர தொலைவில் இருப்பதால், அதனை நாம் எளிதில் அணுக முடியாத சூழ்நிலை உள்ளது. Constable Gives CPR to Save Snake: மூர்ச்சையான பாம்புக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து உரிபிழைக்க வாய்த்த காவலர்; குவியும் பாராட்டுக்கள்.!
ஆனால், விண்வெளி தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நாசா, தனது தொலைநோக்கியின் உதவியுடன் பூமியை கடந்து விண்வெளியில் இருக்கும் பல்வேறு கிரகங்களை ஆராய்ந்து வருகிறது. பல புதிய கிரகங்களையும், பால்வழி அண்டங்களையும் கண்டறிந்து வருகிறது.
அதே போல, சமீபத்தில் நாசா நெபுலா மற்றும் அதன் நட்சத்திரக் கூட்டம் உட்பட நமது பால்வழி அண்டத்தைப் போல, பல பால்வழி நட்சத்திரக் கூட்டங்களை ஒருங்கே படம் பிடித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.
பூமியிலிருந்து இரண்டு லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் சூப்பர் நோவா நட்சத்திரத்தின் ஏற்பட்டுள்ள வெடிப்புகளின் எச்சம், விண்மீன் சுழல் திரள்கள், பிற பிரபஞ்சங்கள் போன்றவற்றையும் அந்த புகைப்படத்தில் நாசா தெளிவுபடுத்தி இருக்கிறது.
View this post on Instagram