Oppo Find X9 Pro: ஓப்போ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. Oppo Find X9 Pro சிறம்பம்சங்கள் இதோ.!

Oppo Find X9 & Oppo Find X9 Pro ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 18, 2025 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருக்கிறது. இந்தப்பதிவில் ஓப்போ பைண்ட் எக்ஸ்9 மற்றும் ஓப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.

Oppo Find X9 Pro: ஓப்போ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. Oppo Find X9 Pro சிறம்பம்சங்கள் இதோ.!
Oppo Find X9 Series (Photo Credit : @OPPOIndia X)

நவம்பர் 16, சென்னை (Technology News): இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில், குறுகிய காலத்தில் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து பிரபலமடைந்த நிறுவனம் ஓப்போ (Oppo India). சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓப்போ நிறுவனம், விரைவில் தனது அடுத்த ஸ்மார்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச அளவில் அதிக செல்போன் விற்பனையை மிக எளிதான காலத்தில் அணுகிய ஒப்போ நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான Oppo Find X9 Pro ஸ்மார்ட்போன் விரைவில் சந்தைகளில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம்:

அந்த வகையில், நவம்பர் 18ம் தேதி முதல் ஓப்போ பைண்ட் எக்ஸ்9 மற்றும் ஓப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்காக களமிறக்கப்படவுள்ளன. கூகுள் ஜெமினி ஏஐ ஆதரவுடன் ஓப்போ நிறுவனம் தனது படைப்பை களமிறக்குவது, எதிர்வரும் ஆண்டுகளில் ஏஐ தேவையை கருத்தில் கொண்டு, சந்தை நிலவரத்திற்கேற்ப ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூசி, நீர் எதிர்ப்பு IP68, இப்௬௯ மதிப்பீடுகளுடன், ColorOS 16 இயங்குதளமும் இதில் உள்ளது. இரண்டு ரக ஸ்மார்ட்போனில் 200 MP Hasselblad லென்ஸ் போன்ற சிறப்பம்சம் இடம்பெற்றுள்ளது. Laptop Buying Tips: லேப்டாப் வாங்க நினைக்கிறீங்களா? அசத்தல் டிப்ஸ்... இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க.!

ஓப்போ எக்ஸ்9 சீரிஸ் சிறப்பம்சங்கள்:

நவம்பர் 18ல் களமிறங்கும் ஸ்மார்ட்போனின் விலை ரூ.74,999ல் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Oppo Find X9 மாடலில் 12GB+256GB வகை ஸ்மார்ட்போனுக்கு இந்த விலை பொருந்தும். அதே நேரத்தில், 16GB+512GB ஸ்மார்ட்போனின் விலை ரூ.84,999 ஆக இருக்கலாம். OPPO Find X9 Pro 16GB + 512GB விலை ரூ. 99,999 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. OPPO Find X9 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன், 1.5K தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரீஃப்ரஷ் ரேட்டை கொண்டிருக்கும். 3,600 நைட்ஸ் வரை உச்ச பிரகாசம், 7,025mAh பேட்டரி, 50MP முதன்மை சென்சார், 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவையும் கூடுதல் சிறப்பம்சங்களாக இடம்பெற்று இருக்கும்.

(The above story first appeared on LatestLY on Nov 16, 2025 02:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).