Realme 12 Pro Mobile: அசத்தலான மொபைலை வெளியிடும் ரியல்மி... அதிலுள்ள சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!
ரியல்மி நிறுவனம் 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனை அடுத்ததாக வெளியிட இருக்கிறது.
ஜனவரி 05, சென்னை (Chennai): சீனாவில் ரியல்மியின் அடுத்த புது ஸ்மார்ட்போன் சீரிஸானா ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro) தற்போது சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் பின்புறம் பேனல் லெதர் ஃபினிஷிங்கில் அமைந்திருக்கிறது. இந்த புதிய ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் மொபைலின் விலை ரூ.23,000ல் இருந்து ரூ.27,000 வரையிலும் நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. TN Pongal Gift 2024: பொங்கல் பரிசாக ரூ.1000.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!
சிறப்பம்சங்கள்: ரியல்மி 12 ப்ரோ ஆனது 6.7 இன்ச் FHD OLED டிஸ்பிளே கொண்டது. மேலும் 50MP+8MP+32MP 2x telephoto ரியர் கேமரா யூனிட் மற்றும் 16 MP செல்பி கேமரா உடையது. இதில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளது. அதுமட்டுமின்றி 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது. அதே நேரம் ரியல்மி 12 ப்ரோ + ஆனது 6.7 இன்ச் FHD+ OLED டிஸ்பிளே கொண்டது. மேலும் 50MP+8MP+64MP OV64B periscope ரியர் கேமரா யூனிட் மற்றும் 32 MP செல்பி கேமரா உடையது. இதில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளது. இதுவும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது.
(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

