Samsung Galaxy A05s: சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் விற்பனை தேதி அறிவிப்பு: சாம்சங் செல்போன் விரும்பிகள் தயாராகுங்க.!
விழாக்களை கொண்டாட்டங்களுக்கு நடுவே அக்.18 அன்று சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், Samsung A05s மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 13, புதுடெல்லி (Technology News): தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து இந்தியாவில் (Festivals on India) கொண்டாட்டங்கள் சிறப்பிக்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு சிறுதொழில் செய்யும் நிறுவனங்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை தங்களின் பொருட்களை விற்பனை செய்ய முயற்சிக்கிறது. சந்தைகளில் பல புதிய தயாரிப்புகள் அடுத்தடுத்து அறிமுகமாகின்றன.
தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை என்பது அபரீதமாக அதிகரித்து வரும் நிலையில், சாம்சங் (Samsung) நிறுவனம் தனது கேலக்சி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) ஸ்மார்ட்போனை அக்.18 அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. இந்த தகவலை அந்நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இது சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு உற்சாக செய்தியை வழங்கியுள்ளது.
சாம்சங்கின் கேலக்சி ஏ05எஸ் மாடல் அக்.18 முதல் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகமாகிறது. இளம் பச்சை, இளம் நீலம், கருப்பு ஆகிய நிறங்களில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. 6.7 இன்ச் FHD+ டிஸ்பிளே, 50 MP ட்ரிபிள் கேமிரா VIVID முறையில் போட்டோ எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Protect Eyes: தினமும் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!

வெளிச்சம் குறைவாக இருக்கும் இடங்களிலும், உயர்ந்த தரம் கொண்ட புகைப்படங்களை இவை ஈடுபவை ஆகும். 2 MP Depth மற்றும் 2MP Micro கேமராவும் உள்ளன. 13 MP செல்பி கேமிராவும் உள்ளதால், வீடியோ கால் இனி மாறுபட்ட தரத்தில் பேசி மகிழலாம். செல்பி எடுக்க புதிய அனுபவம் வழங்கும்.
இதனைத்தவிர்த்து 680 Snapdragon ப்ராசசர், 6nm Process Technology போன்றவை ஆப்களுக்கு Multitask கொடுத்தாலும் செயல்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. திருவிழா கொண்டாட்டத்திற்கு நடுவே அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி ஏ05எஸ் ஸ்மார்ட்போன், செல்போன் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விலை நிர்யணம் செய்யப்படலாம்.
(The above story first appeared on LatestLY on Oct 13, 2023 05:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

