Madonna & Pope Francis: அமெரிக்க நடிகையுடன் போப் பிரான்சிஸ்? ஏஐ கிளப்பிய பகீர் சர்ச்சை.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!

இந்த விவகாரம் நெட்டிசன்களிடையே விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது.

Madonna & Pop Francis (Photo Credit: @PopCrave X)

டிசம்பர் 15, லாஸ் ஏஞ்சல்ஸ் (Technology News): அமெரிக்கா நாட்டினைச் சேர்ந்த பிரபல பாடகி, பாப் உலகின் இளவரசி, அரசி, நடிகை என பன்முகத்தன்மை கொண்டவர் மடோனா (Madonna). இவர் உலகளவில் பிரபலமான திரைப்பிரபலம் ஆவார். 66 வயதுடைய திரைப்பட நடிகை மடோனா, தற்போது தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மீண்டும் சர்ச்சையை உண்டாக்கிய ஏஐ:

இதனிடையே, நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட அதிர்ச்சி காணொளி ஒன்றை பகிர்ந்தார். அந்த காணொளியில், வாடிகன் சிட்டியில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (Pope Francis) உடன் இருப்பது போன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. Vivo X200 Series: அசத்தலான சிறப்பம்சங்களுடன் விவோ எக்ஸ்200 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

போப் பிரான்சிஸுடன் முத்தம்:

இந்த புகைப்படத்தில் இருவரும் முத்தமிடுவது போன்ற காட்சியும் இருந்தது. ஏஐ தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படம் & காணொளியை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த நடிகை, தனது அதிர்ச்சியையும் விவரித்து இருக்கிறார். தற்போது 87 வயதாகும் போப் பிரான்சிஸ், உலகளவில் அமைதி நிலவ வேண்டும் எனவும் தனது கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.

இந்தியாவிலும் அதிர்ச்சி தந்த டீப் பேக் (Deepfake AI):

இந்நிலையில் தான் அவரின் புகைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷயம் பேசுபொருளாகவும் மாறி இருக்கிறது. ஏற்கனவே ஏஐ டீப்பேக் தொழில்நுட்பம் உதவியுடன் உருவாக்கப்பட்ட பல காணொளிகள், இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், இவ்வாறான விஷமத்தன செயல்களை கையாள உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மடோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஏஐ புகைப்படம் மற்றும் போப் பிரான்சிஸ் நடிகைக்கு முத்தம் கொடுப்பது போன்று வடிவமைக்கப்பட்ட காட்சிகள் வைரல்: