Meta Down: திடீரென முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்அப்.. உலகம் முழுவதும் பயனர்கள் அவதி..!

உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட மெட்டா சேவைகள் திடீரென நேற்று இரவு முடங்கின.

Meta Down: திடீரென முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்அப்.. உலகம் முழுவதும் பயனர்கள் அவதி..!
WhatsApp Logo | Meta Logo File Pic (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 12, சென்னை (Technology News): உலகின் பல பகுதிகளில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா (Meta) சேவை முடங்கியுள்ளது. நேற்று (டிசம்பர் 11) இரவு மணி முதல் வாட்ஸ் அப் (WhatsApp) செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் புகார் அளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. Gold Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை; சவரன் ரூ.58,280/- க்கு விற்பனை.!

சில முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அதுகுறித்த தகவலை அந்த நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்கள் முடங்கியது குறித்து ஏராளமான பயனர்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மெட்டாடவுன், வாட்ஸ்அப்டவுன் (WhatsApp Down) போன்ற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி பயனர்கள் பலரும் புகார் அளித்து வருகின்றனர்.

இதனால் இந்த ஹேஷ்டேக்குகள் உலகளவில் ட்ரெண்ட் ஆனது. இதுகுறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இதேபோல கடந்த மார்ச் மாதம் உலகளவில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Dec 12, 2024 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).