Solar and Lunar Eclipses: சூரிய, சந்திர கிரகணம்.. ஏன் நடைபெறுகிறது? அறிவியல் விளக்கம் இதோ..!
சூரிய சந்திர கிரகணங்கள் வானத்தில் தோன்றும் அதிசய நிகழ்வுகள்.
ஜூலை 12, புதுடெல்லி (New Delhi): நம்மில் பலருக்கு தெரியும் சூரியனை நிலா மறைத்தால் சூரியகிரகணம் , பூமி சூரியனை நிலவிடமிருந்து மறைத்தால் அது சந்திரகிரகணம் என்றும். பூமி சந்திரனை விட பெரிய அளவுடையது சூரியனை மறைக்க முடியும் ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது எப்படி சூரியனை மறைக்கிறது தெரியுமா? என்னதான் நிலா 400 மடங்கு சூரியனை விட சிறியதாக இருந்தாலும், சூரியன் நிலாவை விட நம்மிடமிருந்து 400 மடங்கு தொலைவில் இருக்கிறது. அதனால் தான் சூரியனும் நிலாவும் ஒரே அளவாகத் தெரிகிறது.
சூரியகிரகணம்: நிலா ஒரு முறை பூமியை சுற்றி வர 30 நாட்கள் ஆகும். அதனால் தான் அம்மாவாசை பெளர்ணமி நிகழ்கிறது. நிலாவின் சுற்றுப்பாதை பூமிக்கு ஒருபுறமாக சாய்ந்து உள்ளதால் ஒவ்வொரு முறையும் சூரியகிரகணம் நிகழ்வதில்லை. நிலாவில் சுற்றுப்பாதை பூமிக்கும் சூரியனுக்கும் நேர்க்கோட்டில் சந்திக்கும் போது தான் கிரகணம் நிகழும். நிலா சூரியனை மறைக்கும் போது கருநிழல் (அம்ரல்), மற்றும் எதிர்நிழல் (பெனம்ரல்) என இருவித நிழலாக பூமியின் மீது விழுகிறது. பூமியில் இருக்கும் இடத்தைப் பொருத்தே சூரியகிரகணத்தின் மறைவு அமைப்பை பார்க்க முடியும். நான்கு மறைவு அமைவுகளாக சூரியகிரகணம் நிகழ்கிறது. Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் மோதிரம்.. அசத்தல் விபரம் இதோ.!
பகுதி கிரகணம்: சந்திரனின் கருநிழல் பூமியில் விழும் பகுதியிலிருந்து பார்த்தால் சூரியன் முழுவதும் மறைக்கப்பட்டு இருக்கும். இது முழுமையான கதிரவ மறைப்பாகும். எதிர்நிழலில் பகுதியிலிருந்து பார்த்தால் சூரியனின் ஒரு பகுதி மட்டும் நிலாவால் மறைக்கப்படுவதைப் பார்க்கலாம். இதற்கு பகுதி கிரகணம் என்று பெயர்.
கதிரவ மறைப்பு: நிலாவின் சுற்றுப்பாதை ஒரு பக்கம், மறுபக்கத்தை விட பூமியிலிருந்து தள்ளி அமைந்துள்ளது. அப்படி தள்ளி இருக்கும் பகுதியிலிருந்து சூரியனை மறைத்தால் நிலா சற்று சிறிதாகத் தோன்றி சூரியனை வளையமாக தெரியவைக்கும். இது வளைய வடிவ கதிரவ மறைப்பாகும். இது அரிதான கலப்பு கதிரவ மறைப்பு நிகழ்வாகும். இதில் பூமியின் ஒருபக்கம் முழுகதிரவ மறைப்பும், மறுப்பக்கம் வளைய கதிரமறைப்பும் பார்க்க முடியும். TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!
அழகிய வைர மோதிர நிகழ்வு: நிலா சூரியனை முழுமையாக மறைக்கும் கடைசி தருவாயில் நிலவின் உள்ள மலைத்தட்டுகளில் சூரிய வெளிச்சம்பட்டு பிரகாசிக்கும். கடைசி மலைத்தட்டில் பட்டு வரும் வெளிச்சத்தின் நிகழ்விற்கு வைர மோதிர நிகழ்வு என்று பெயர். ஆயிரம் ஆயிரம் கற்பனைக்கு எட்டாத இந்த அண்டத்தில் நம்மால் ஆதாரத்துடன் விளக்க முடிந்த சிறு நிகழ்வுதான் கிரகணங்கள் தோன்றுவதும் மறைவதும்.
(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

