UPI Transaction ID: இனி யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துகளுக்கு அனுமதி இல்லை.. காரணம் என்ன?!
பிப்ரவரி 1, 2025 முதல் UPI ஐடிகளில் சிறப்பு எழுத்துகள் அனுமதிக்கப்படாது.
ஜனவரி 31, புதுடெல்லி (Technology News): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். தற்போது இந்த டிஜிட்டல் பணவர்த்தனையானது மற்ற நாடுகளிலும் நாம் செய்யுமாறு பல்வேறு அம்சங்கள் அறிமுகமாகி வருகின்றனர். Employment News: தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் தேவை.. மாதம் ₹25,000 சம்பளம்... இந்த வாய்ப்பை நழுவ விடாதீங்க..!
UPI ஐடிகளில் சிறப்பு எழுத்துகள்:
இந்நிலையில் பிப்ரவரி 1, 2025 முதல் UPI ஐடிகளில் சிறப்பு எழுத்துகள் அனுமதிக்கப்படாது என நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிவித்துள்ளது. அதாவது @, !, அல்லது # போன்ற சிறப்பு எழுத்துகளைக் கொண்ட எந்தவொரு UPI ஐடியும் தானாகவே நிராகரிக்கப்படும். கண்டிப்பாக எண் மற்றும் எழுத்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். இந்த நடவடிக்கை பரிவர்த்தனை வடிவங்களை தரப்படுத்துவதையும், பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் அல்லது கூகுளின் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட UPI அப்ளிகேஷன்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். வேறு வழிகளில் டவுன்லோட் செய்த செயலிகள் NPCI விதிகளுக்கு இணங்காமல் போகலாம்.
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

