UBS Layoff: 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த UBS கிரெடிட் நிறுவனம்; வேலையை இழந்த சோகத்தில் ஊழியர்கள்.!

நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிதிச்சுமை பிரச்சனையை சரிசெய்து, எதிர்காலத்தில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய யு.பி.எஸ் நிறுவனம் 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

UBS Layoff (Photo Credit: Twitter)

ஜூன் 28, சென்னை (Technology News): சுவிஸ் முதலீட்டு வங்கியான UBS நிறுவனம், தனது பணிநீக்கங்களை தொடர்ந்து வருகிறது. புதிய பணிநீக்கம் காரணமாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த 35 ஆயிரத்திற்கும் அதிகமான வேலையாட்கள் பதியப்பட்டு இருக்கின்றனர்.

இலண்டன், நியூயார்க் மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள வங்கி பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருக்கின்றனர். இந்த பணிநீக்கம் காரணமாக UBS நிறுவனத்திற்கு 6 பில்லியன் அளவு நிதிச்சுமை குறைக்கிறது. Ladies Finger Benefits: வெண்டைக்காயின் வழவழப்பு தன்மையில் இவ்வுளவு விஷயமா?.. வயிற்றுப்புண் முதல் புற்றுநோய் வரை அசத்தல் தீர்வு.!

3 சுற்றுகளாக பணிநீக்கத்தை அறிவித்துள்ள நிறுவனம், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பணிநீக்கம் தொடரும் என அறிவித்துள்ளது. சுமார் 1,20,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வந்த UBS நிறுவனம், வங்கிப்பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது அதன் பணியாளர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் ஊழல் விவகாரத்தில் சிக்கிய வங்கி 5.5 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் முதலீடுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.