Mobile Network: 5G மொபைல் இருந்தும் நெட்ஒர்க் ஆக்டிவேட் ஆகவில்லையா?.. இப்படி செய்து பாருங்கள்...!

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 5 ஜி சேவை நடைமுறைக்கு வந்துவிட்டன. 5G ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அச்சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

Mobile Network: 5G மொபைல் இருந்தும் நெட்ஒர்க் ஆக்டிவேட் ஆகவில்லையா?.. இப்படி செய்து பாருங்கள்...!
5G Network | Mobile Phone (Photo Credit: PTI)

மார்ச் 20: விரைவில் பலரும் 5 ஜி சேவையை (5G Network) பயன்படுத்தும் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், இன்று வரை 2 ஜி சேவைக்காக அல்லாடிக்கொண்டு இருக்கும் கிராமங்களும் உள்ளன. அவையும் விரைவில் அதிவேக (High Speed Internet) இணைய சேவையை பெறும். இன்று நமது ஸ்மார்ட்போனில் 5G தொலைத்தொடர்பு சேவையை உபயோகம் செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் போன் / கூகுள் பிக்சல் (Android & Google Pixel Phone): 5G நெட்ஒர்க் சேவையை இந்த செல்போன்களில் தொடங்குவதற்கு Settings => Network & Internet Option-க்கு செல்ல வேண்டும். பின் Sim Option-ஐ தேர்வு செய்து, விருப்ப Network ஐ 5G ஆக மாற்றி உபயோகம் செய்யலாம். TOPS to fund Neeraj Chopra: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சி செலவுகளை ஏற்றது மத்திய அரசு.!

சாம்சங் (Samsung Mobile): சாம்சங் நிறுவன ஸ்மார்போன்களில் 5G சேவையை தொடங்குவதற்கு Settings => Option சென்று, Mobile Network ஐ தேர்ந்தெடுத்து 5G LTE அமைப்பை தேர்வு செய்து கொள்ளவும். அப்போது 3G மற்றும் 2G Auto Connect Option-ஐ தேர்வு செய்துகொள்ளவும்

ஒன் பிள்ஸ்: OnePlus செல்போனில் 5G நெட்ஒர்க் சேவையை தொடங்குவதற்கு Settings => சென்று Wifi & Network Option க்குள் செல்லவும். அதில் Sim & Network அமைப்புக்குள் செல்ல வேண்டும். அங்கு Profile Network Type பக்கத்திற்கு சென்று தானியங்கு அமைப்பில் 2G 3G 4G 5G நெட்ஒர்க்-களை தேர்வு செய்யவும்.

ஒப்போ / ரியல்மி (Oppo & Realme): ஒப்போ மற்றும் ரியல்மி நிறுவன செல்போன்களை நீங்கள் பயன்படுத்தி வந்தால் Settings => Link & Share பக்கத்திற்குள் சென்று, Sim 1 & Sim 2 ஆகியவற்றை தனித்தனியே தேர்வு செய்து நெட்ஒர்க்-களை தேர்ந்தெடுத்து 2G முதல் 5G வரை உபயோகம் செய்துகொள்ளலாம்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement