Xiaomi Mix Flip Smartphone: சந்தையில் புதிய பிலிப் மொபைல்.. மாஸ் காட்டப்போகும் சியோமி ஸ்மார்ட்போன்..!
சியோமி நிறுவனம் தற்போது சீனாவில் தனது பிலிப் ஸ்மார்ட்போனுக்கு சான்றிதழ் பெற்றுள்ளது.
ஜனவரி 19, புதுடெல்லி (New Delhi): சியோமி (Xiaomi) நிறுவனம், கடந்த ஆண்டில் இருந்து பிலிப் (Flip) மொபைல் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. சியோமி, மிக்ஸ் ஃப்ளிப் (Mix Flip) என்ற பெயரில் ஸ்மார்ட்போனை தயாரிக்க திட்டமிட்டிருந்தது. சியோமியின் இந்த புதிய மிக்ஸ் ஃப்ளிப் ஸ்மார்ட்போன், இந்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் இந்த மொபைலுக்கான சான்றிதழை அளித்துள்ளது. Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா... அரசின் ஆயுள் காப்பீடு திட்டம்... இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.. வாங்க..!
சிறப்பம்சங்கள்: இந்த புதிய சியோமி மிக்ஸ் ஃப்ளிப் மொபைலில் ரியர் கேமரா யூனிட்டில் 3 கேமராக்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் தயாரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சீன டெக் வல்லுநர்கள் கூறுகின்றனர். சில மாதங்களில் இந்த மொபைல் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 19, 2024 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

