அக்டோபர் 09, இஸ்ரேல் (World News): இஸ்ரேல் அரசுக்கும் - பாலஸ்தீனிய பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் போரில், அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு எதிராக திடீர் போர் அறிவிப்பை வெளியிட்டு, பல்முனை தாக்குதலை கையில் எடுத்த ஹமாஸ் பயங்கரவாதிகள், தொடர்ந்து இஸ்ரேலிய மக்கள் மற்றும் அரசை எதிர்த்து போர்புரிந்து வருகின்றனர். எங்கும் மக்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பிணையக்கைதியாக பிடித்து செல்லப்படுகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா-இஸ்ரேலி இளைஞர் ஹரேஷ் கோல்பேர்க் போலின் (American-Israeli man Hersh Golberg-Polin), இஸ்ரேலில் நடைபெற்ற இசை விழாவுக்கு சென்றுள்ளார். Assembly Election 2023 Schedule: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் தேர்தல் எப்போது?.. சட்டப்பேரவை ஆயுட்காலம் முடியும் முன் அடுத்த ஆட்சி.. விபரம் இதோ.!
போர் தொடங்கும் அன்று அக்.07ம் தேதி இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இசை நிகழ்ச்சியில் ஊடுருவி கொடூர தாக்குதலை நடத்தினர். அப்போது, தனது குடும்பத்திற்கு "I love you" மற்றும் "I’m sorry," என செய்தி அனுப்பிய இளைஞரை யாரும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
அவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மரணம் அடைந்தாரா? அல்லது உயிருடன் எங்காவது தப்பி இருக்கிறாரா? என தற்போது வரை தெரியவில்லை. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.