American Teacher Arrested: 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 43 வயது ஆசிரியை கைது..!

அமெரிக்காவில் சிறுவன் ஒருவருடன் பள்ளி வகுப்பறையில் பாலியல் உறவில் இருந்த பெண் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

American Teacher Arrested: 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 43 வயது ஆசிரியை கைது..!
Arrest | Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 11, கலிபோர்னியா (World News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா (California) மாகாணத்தில் வசித்து வருபவர் கோலன் ஜோ மாட்ரிகோ (வயது 43). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வகுப்பறையில் 13 வயது மாணவர் ஒருவர் படிக்கிறார். இதனிடையே, 13 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லித் தருவதாக ஆசிரியை பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவரை பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார். Mexico Shocker: கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரி துப்பாக்கிசூடு; 7 ஆண்கள், 3 பெண்கள் பரிதாப பலி., 7 பேர் படுகாயம்.!

இதுகுறித்து, சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, கடந்த நவம்பர் 08-ஆம் தேதி பெண் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).