Young Russian Girl Falls From 13th Floor, Survives: 13-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்; சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய காட்சிகள் வைரல்..!

ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் 13-வது மாடியில் இருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Young Russian Girl Falls From 13th Floor, Survives: 13-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்; சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய காட்சிகள் வைரல்..!
Young Girl Fell From the Floor (Photo Credit: @vani_mehrotra X)

ஜூலை 23, ரஷ்யா (World News): ரஷ்யாவில் 22 வயது இளம்பெண் ஒருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து, அதிர்ஷ்டவசமாக ஒரு சில சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ரஷ்யாவில் உள்ள நோவோசிபிர்ஸ்கில், ஏவியேஷன் தெருவில், ஜூலை 18-ஆம் தேதி அன்று, சைபீரிய நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒரு கட்டிடத்தின் 13-வது மாடியில் இருந்து கீழே உள்ள புல்வெளியில் விழுந்தார். Teacher Arrest: பள்ளி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது..!

இதில், அதிர்ஷ்டவசமாக அவருக்கு சிறிய எலும்பு முறிவு மற்றும் பெரிய காயங்கள் என எதுவும் இல்லாமல் உயிர்பிழைத்துள்ளார். நுரையீரலில் (Lungs) மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் விழுந்த சில நிமிடங்களில் தானாகவே எழுந்து அமர்ந்துகொண்டு இருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).