Brazil President Luiz Inacio Lula da Silva: பிரேசில் அதிபரை கொலை செய்ய திட்டம்; 2 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான உண்மை.. அதிர்ச்சியில் மக்கள்.!
பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, 2022 இல் பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்னர், தனக்கும் துணை ஜனாதிபதி ஜெரால்டோ அல்க்மினுக்கும் விஷம் கொடுக்க சிலர் முயற்சித்ததாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 22, ரியோ டி ஜெனிரோ (World News): கடந்த 2022ம் ஆண்டு பிரேசில் ஜனாதிபதியாக (Brazil President) லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) பொறுப்பேற்றார். அவர் பொறுப்பு ஏற்கும் முன், அவரை கொலை செய்ய முயற்சிகள் பல நடந்தன. இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய பிரேசில் ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, 2022 இல் பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்னர், தனக்கும் துணை ஜனாதிபதி ஜெரால்டோ அல்க்மினுக்கும் விஷம் கொடுக்க சிலர் முயற்சித்ததாகவும் அதில் அவர்கள் தோற்றுவிட்டதாகவும் பகீர் வாக்குமூலம் கொடுத்தார். Adani News: அதானி குழுமத்திற்கு அடுத்தடுத்து பேரிடி.. ஒப்பந்தத்தை ரத்து செய்து கென்யா அரசு உத்தரவு.!
அதிபரை கொல்லும் திட்டம், ஆட்சியை கவிழ்ப்பு, உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் கொள்ளும் திட்டம் உள்ளிட்ட சதிதிட்டங்களை, 4 ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி ஆகியோர் தீட்டியதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது நீண்ட காலமாகவே சந்தேகம் இருந்த நிலையில் தற்போது அந்த ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த விசாரணை ஜனவரி 8 நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 22, 2024 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

