Liquor Challenge: நேரலையில் மதுகுடித்த யூடியூபருக்கு இப்படியா நடக்கணும்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. சவால் தந்த பரிசாக மரணம்.!

மதுபானம் வீட்டிற்கும், உடல்நலத்திற்கும் கேடு என்பதை புரிந்துகொண்ட மேலை நாடுகளில் கூட, சவால் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தும் சவால் மேற்கொள்ளப்பட்டு மரணங்கள் நடக்கிறது.

Zhong Yuan Huang Visual from Video | Liquor Drinks file Pic (Photo Credit: @ANI / Pixabay)

ஜூன் 08, பெய்ஜிங் (China News): சீனாவில் உள்ள பெய்ஜிங், சென்ட்ரல் பிளைன் பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஜோங் யுவான் ஹுவாங் (Zhong Yuan Huang). இவர் சீனாவில் உபயோகம் செய்யப்பட்டு வரும் சமூக ஊடகங்களில் பிரபலமான நபர் ஆவார். சமீபமாகவே சமூக வலைத்தளங்களில் அதிகளவு மதுபானம் நேரலையில் அருந்தும் சவால் வைரலாகி வருகிறது.

இதனைக்கண்ட யுவான் தானும் விரைந்து பின்தொடர்பாளர்களை பெறவும், பார்வையாளரின் எண்ணிக்கையால் சம்பாதிக்கவும் நினைத்தவர் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்காக மதுபானங்கள் அதிகளவு வாங்கி வந்து, நேரலையில் (Liquor Challenge Gives Death on Live Streaming) அதனை குடிக்க ஆரம்பித்துள்ளார். BSNL Network: 4G & 5G சேவைகளை வழங்க BSNL நிறுவனத்திற்கு ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு.!

நேரலையில் மதுபானம் குடிக்க தொடங்கியவர் ஒவ்வொரு பாட்டில் காலி ஆனதும், அதனை பெருமை போல பார்வையாளர்களிடம் காண்பித்து இருக்கிறார். இவர் அருந்திய மதுவை 35% முதல் 60% ஆல்ஹகால் கொண்ட மதுபானம் ஆகும். இவர் தனது சமூக பக்கத்தில் 1,76,000 பேரை பின்தொடர்பாளராக கொண்டுள்ளார்.

ஹவாங்கின் மனைவி லி ஹவாங் இதுகுறித்து தெரிவிக்கையில், "எனது கணவருக்கு திருமணத்திற்கு முன்பு இருந்து பெரிய கடன் இருந்து வந்தது. அதனை அடைக்க ஓயாது உழைத்து வந்தார். நேரலையில் மதுகுடித்தால் பணம் அதிகம் கிடைக்கும் என இறுதியில் அவரின் முடிவை தேடிக்கொண்டார்" என கூறினார்.

"உயிரைக் காட்டிலும் பணம் முக்கியமானது இல்லை"

"வாழ்க்கை என்பது பணத்தைப் பற்றியது அல்ல, ஆனால் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ உங்களுக்கு பணம் தேவைப்படும் என்றாலும், கிடைத்ததை வைத்து வாழ பழகுங்கள்"

"ஒரேநாளில் பணக்காரன், ஓவர் நைட்டில் பில்கேட்ஸ் என்ற எண்ணம் இறுதியில் விபரீதத்தையே பரிசாக தரும்"

"மதுபானம் உடல் நலத்திற்கு தீங்கானது; அது உயிரை கொல்லும் (Consumption of Alcohol is Bad to Health & it Gives Death Penalty)"

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement