மார்ச் 30, டோக்கியோ (World News): ஜப்பான் நாட்டில் உள்ள கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் ஒன்று ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளான பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் (Banned Cholesterol Medicine) உள்ளிட்ட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்துள்ளது. Bank Employee Trapped In Train And Death: ரயிலில் சிக்கி வங்கி ஊழியர் பலி – திருடனை பிடிக்க முயன்ற போது நேர்ந்த சோகம்..!
இந்நிலையில், இந்த மருந்துகளை உட்கொண்டவர்களுக்கு சிறுநீரக கோளாறு பிரச்சனைகள் வருவதாக புகார் வந்தது. இதனால், கடந்த 22-ஆம் தேதி இந்த மருந்துகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இருப்பினும், அதனை கடந்த ஒரு வாரங்களில் உட்கொண்ட 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுதொடர்பாக ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.