Chile Forest Fire: சிலியில் திடீர் காட்டுத்தீ; 10 பேர் பலி., 1000 வீடுகள் தீயில் நாசம்.!

சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி மக்கள் பலியாகி, வீடுகள் தீயில் எரிந்து நாசமான சோகம் நடந்துள்ளது. இதனால் தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்கள் அவசர கதியில் வெளியேற்றப்படுகின்றனர்.

Chile Forest Fire: சிலியில் திடீர் காட்டுத்தீ; 10 பேர் பலி., 1000 வீடுகள் தீயில் நாசம்.!
Chile Forest Fire (Photo Credit: @BNO_News)

பிப்ரவரி 03, சிலி (World News): அமெரிக்காவில் உள்ள சிலி, மத்திய சிலி பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரம் வீடுகள் முற்றிலும் தீயின் பிடியில் சிக்கி எரிந்தன. இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 10 பேர் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டுத்தீ குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Thai Amavasai 2024: முன்னோர்களை வழிபட தயாரா?.. ஆன்மீக அன்பர்களே.. தை அமாவாசையை தவறவிடாதீங்க.. முழு விபரம் இதோ.! 

அவசர கதியில் வெளியேற்றப்படும் மக்கள்: மேலும் தீ பரவாமல் தடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். விமானங்களின் உதவியுடன் நீர் எடுத்து வரப்பட்டு, ஆகாயத்தில் வழியாக நீர் தெளிக்கப்பட்டும் தீ பரவலை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் என்பது தற்போது வரை தெரியவராத நிலையில், மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான முகாம்களுக்கு அவசரக் கதியில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

(The above story first appeared on LatestLY on Feb 04, 2024 02:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).