Cylinder Explosion In Pakistan: சிலிண்டர் வெடித்து 3 மாடிக்கட்டிடம் தரைமட்டம்... பாகிஸ்தானில் பரபரப்பு..!
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 3 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் 9 பேர் பலியாகினர்.
மார்ச் 13, பஞ்சாப் (World News): பாகிஸ்தானில் (Pakistan) பஞ்சாப் (Punjab) மாகாணத்தின் ஹாராம் கட் முல்தான் (Haram Gate Multan) நகரில் 3 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் நேற்று திடீரென சிலிண்டர் வெடித்து (Cylinder Explosion), பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இத்தகவலறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் 9 பேர் சடலமாகவும், 2 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டனர். TN New Ration Card: புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த ஜாக்பாட்.. தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு..!
உயிருடன் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவல்களின் படி இக்கட்டடத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே, கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதற்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Mar 13, 2024 07:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

