Women Thrown from Window by Husband: சுவையாக சிக்கன் சமைக்காத மனைவி: மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவர் குடும்பம்; பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை விவகாரங்கள் உலகெங்கும் கடும் அதிர்வலையை ஏற்படுத்துகின்றன. பாகிஸ்தானில் பெண் ஒருவர் மேல்தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மார்ச் 31, லாகூர் (Pakistan News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் பகுதியை சேர்ந்தவர் ஸுபைர். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் சாப்பிட சிக்கன் (Women Thrown by Husband Family) சமைக்கப்பட்டுள்ளது. அதனை கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு மனைவி பரிமாறி இருக்கிறார்.
சிக்கன் சுவையாக இல்லை என கொடூரம்: அச்சமயம் உணவு சுவையாக (Chicken Receipe) இல்லை என்று கூறி சுபைர் தனது மனைவியை கடிந்துகொண்டு இருக்கிறார். அவருடன் சேர்ந்து சுபைரின் குடும்பத்தினரும் பெண்ணை அவதூறு பேசி இருக்கின்றனர். ஒருகட்டத்தில் அவரை தூக்கி, முதல் தலத்தில் இருந்து ஜன்னல் வழியே கீழே வீசியுள்ளனர். LSG Vs PBKS Highlights: ஐபிஎல் 2024 தொடரில் முதல் வெற்றியை சொந்த மண்ணில் உறுதி செய்த லக்னோ அணி; 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!
கணவர் கைது, குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை: இதனால் நிலைகுலைந்துபோன பெண்மணி வலியால் அலறி இருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அவசர ஊர்தியின் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணைக்கு பின்னர் முதற்கட்டமாக ஜுபைரை கைது செய்தனர். அவரின் குடும்பத்தினரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
A woman in Lahore, Pakistan was thrown out of a window by her husband & his parents for not spicing the chicken properly. She survived but is in critical condition.
One main accused is arrested but others are free #DomesticAbuse #Lahore #Pakistan pic.twitter.com/oDiPEOF6us
— Uzair Baloch (@ubaloxh94) March 28, 2024
(The above story first appeared on LatestLY on Mar 31, 2024 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

