Bus Crash: பள்ளத்தில் பாய்ந்து அப்பளமாக நொறுங்கிய பேருந்து; 45 பயணிகள் துள்ளத்துடிக்க பலி.. உயிர் தப்பிய 8 வயது சிறுவன்.!

இவ்விபத்தில் 45 பேர் பலியாகினர்.

South Africa Bus Crash (Photo Credit: @Nytimes X)

மார்ச் 29, கேப் டவுன் (World News): கிருத்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான தென் ஆப்பிரிக்காவில், தற்போது ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டமானது உச்சம் பெற்றுள்ளது. வெளியூரிலிருந்து பணியாற்றி வரும் பலரும், தங்களின் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் ஈஸ்டர் பாண்டியை சிறப்பித்து வருகின்றனர்.

பாலத்தை உடைத்து பாய்ந்த (South Africa Bus Crash) பேருந்து: இந்நிலையில், போஸ்ட்வானா நகரில் இருந்து மொரியா நகருக்கு சென்ற பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. பாலத்தை உடைத்துக்கொண்டு பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணம் செய்த 45 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் என்ன மீட்புப்படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். Cocoa Prices Reach All-Time High: “காய்கறி ரேட் எல்லாம் ஏறுது.. நாங்க என்ன தக்காளி தொக்கா..” என கிடுகிடுவென உயரும் சாக்லேட்டின் விலை..! 

ஒரேயொரு சிறுவன் உயிர்பிழைப்பு: இவ்விபத்தில் பெரும் ஆச்சரிய நிகழ்வாக, 45 பயணிகளை பலிகொண்ட விபத்தில் 8 வயது சிறுவன் மட்டுமே அதிஷ்டவசமாக உயிர்தப்பி இருக்கிறார். சிறுவன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான கரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க அதிபர் சைரில் ராமபோஷா, உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் துணை நிற்பதாக தெரிவித்து இருக்கிறார்.

விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif