California Narayan Temple Pro Khalistani Slogans: கலிபோர்னியாவில் உள்ள நாராயணன் கோவிலில் காலிஸ்தான் வசனம்: அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக பிரிவினைவாதிகள் அதிர்ச்சி செயல்.!

சர்வதேச அளவில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சனையை முதலில் எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது காலிஸ்தான் நாடு கேட்டு சீக்கியர்கள் செய்யும் பிரிவினைவாத கருத்துக்களையும் எதிர்கொள்கிறது.

California Narayan Temple Pro Khalistani Slogans: கலிபோர்னியாவில் உள்ள நாராயணன் கோவிலில் காலிஸ்தான் வசனம்: அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக பிரிவினைவாதிகள் அதிர்ச்சி செயல்.!
Hindu Temple Khalistan slogans (Photo Credit: @ANI X)

டிசம்பர் 23, கலிபோர்னியா (World News): அமெரிக்காவில் வாழும் இந்துக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களின் இறையாண்மையை ஊக்குவிக்கும்பொருட்டு, அந்நாட்டு அரசு அனுமதியுடன் பல இடங்களில் கோவில்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன. இவைக்கு அமெரிக்கா அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது.

பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களால் தொடரும் சம்பவம்: சமீபகாலமாகவே காலிஸ்தான் தனிநாடு கேட்கும் சீக்கிய பிரிவினைவாதிகள், வெளிநாடுகளில் உள்ள இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்து கோவில்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இந்திய தேசியக்கொடி அவமதிக்கப்படுகிறது. Snake Smuggling: பிஸ்கட், கேக் பெட்டிகளில் அடைத்து கொண்டு வரப்பட்ட பாம்புகள்; விமான நிலையத்தில் நடுநடுங்கிப்போன அதிகாரிகள்.! 

கலிபோர்னியாவில் அதிர்ச்சி: இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நியூஆர்க் நகரில் இருக்கும் ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவில் நேற்று காலிஸ்தானிய பிரிவினைவாதிகளால் சேதப்படுத்தப்பட்டது. கோவில் சுவற்றில் கருப்பு பெயிண்டால், இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்திய துணை தூதரகம் கண்டனம்: இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள சான் பிரான்சிஸ்கோ இந்திய துணைத்தூதரகம், அமெரிக்கா அரசிடம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அழுத்தம் கொடுத்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Dec 23, 2023 10:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).