Women Murder While Cooking: வெங்காயம் வெட்டும் தகராறில் பெண் கத்தியால் வெட்டிக்கொலை: 60 வயது நபர் அதிர்ச்சி செயல்.!

சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், வீட்டில் அவர்களுக்கு தெரிந்தவர்களால் நடக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவது தனி மனிதனின் கோபம் போன்ற விஷயங்களை கட்டுப்படுத்த இயலாத தன்மையை பிரதிபலிக்கிறது.

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 11, இண்டியானா (World News): அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாண மாகாணத்தில் வசித்து வருபவர் மைக்கேல் கார்வர்டு (வயது 60). இவரின் காதலி மார்சியா லென்ஸ்கி. சம்பவத்தன்று இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்த நிலையில், மர்சியா மைக்கேல் இடையே வெங்காயத்தை வெட்டுவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது.

தகராறில் அரங்கேறிய பயங்கரம்: இந்த வாய் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த மைக்கேல், தனது காதலி மர்சியாவை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் நிலைகுலைந்துபோன மர்சியா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோம் என உணர்ந்த மைக்கேல், இரவு முழுவதும் காதலியின் சடலத்துடன் இருந்தார்.

என் காதலி இனி இல்லை என தகவல்: பின்னர் காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, தனது காதலி இனி தன்னுடன் இருக்க மாட்டார் என்று கூறி தனது வீட்டின் முகவரியை தெரிவித்து அழைப்பை துண்டித்திருக்கிறார். வீட்டில் சோதனை நடத்திய போது மர்ஷியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதிகாரிகளிடள் மைக்கேல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையும் நடந்து வருகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement