IPL Auction 2025 Live

Trump Rally Shooting: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிசூடு; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.!

ஏனெனில் வல்லரசான அமெரிக்காவின் அதிகாரம், உலகின் பல நாடுகளை இணைக்கும் பாலம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

Donald Trump Shot (Photo Credit: @BehizyTweets X)

ஜூலை 14, (World News): அமெரிக்காவில் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் தீவிர பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், இருவரும் நேருக்கு நேர் விவாதத்திலும் சந்தித்துக்கொண்டனர்.

துப்பாக்கியால் சுடப்பட்ட ட்ரம்ப்:

இந்நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்று சனிக்கிழமை குடியரசுக்கட்சியின் சார்பில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள புல்ட்டர் என்ற பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டம் மற்றும் பேரணியில் கலந்துகொண்டார். அங்கு தனது ஆதரவாளர்கள் முன்பு அவர் உரையாடிக்கொண்டு இருந்தார். அச்சமயம், கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென ட்ரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். Motorola Edge 50 Neo: புத்தம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் இதோ..! 

மருத்துவமனையில் அனுமதி:

இந்த சம்பவத்தில் ட்ரம்பின் காதுகளுக்கு மிக அருகில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. துப்பாக்கிசத்தம் கேட்டு ட்ரம்ப் குனித்துக்கொண்டதும், அவரை பாதுகாலவர்கள் சூழ்ந்தனர். அதன்பின்னரே ட்ரம்ப் காயமடைந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை உடனடியாக மீட்ட பாதுகாவலர்கள், விரைந்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

ஜோ பைடன் ட்விட்:

லேசான காயத்துடன் நூலிழையில் உயிர்தப்பிய ட்ரம்ப், அங்கிருந்து பத்திரமாக அழைத்து செல்லப்பட்டார். இந்த விஷயம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. மேலும், துப்பாக்கிசூடு நடத்திய நபர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசயத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், ட்ரம்ப் விரைந்து உடல்நலம் பெற வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

ட்ரம்ப் தாக்கப்பட்ட காட்சி:

டிரம்ப் பேசிக்கொண்டு இருக்கும்போதே நடந்த பகீர் சம்பவம்: