Indian Doctor Arrested: அமெரிக்காவில் இந்திய மருத்துவர் கைது; சுமார் 13 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த இந்திய மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Indian Doctor Arrested: அமெரிக்காவில் இந்திய மருத்துவர் கைது; சுமார் 13 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!
Indian Doctor Arrested | Sexual Abuse File Pic (Photo Credit: @KnightErrant01 X | Pixabay)

ஆகஸ்ட் 22, வாஷிங்டன் (World News): அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள ஓக்லாண்ட் கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் ஹில்ஸில் இந்தியாவை சேர்ந்த உமைர் ஏஜாஸ் (வயது 40) என்பவர் வசித்து வருகிறார். இவர், அங்கு மருத்துவராக (Doctor) பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி, குளியலறைகள், மாற்றுப் பகுதிகள், மருத்துவமனை அறைகள் மற்றும் தனது சொந்த வீட்டில் இருந்து பல்வேறு அமைப்புகளில் மறைவான கேமராக்களை வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், குழந்தைகளை ஆடைகளை அவிழ்த்து பல்வேறு நிலைகளில் பதிவு செய்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். PM Modi's Poland Speech: "இந்தியா இந்த உலகத்தில் அமைதியை ஆதரிக்கும் நாடு" - போலந்தில் பிரதமர் மோடி உரை..!

இவர், கடந்த பல ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் பெண்களின் நூற்றுக்கணக்கான நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து, பல பெண்களுடன் அவர் பாலியல் சீண்டலில் (Rape) ஈடுபட்டுள்ளார். இதனை முழுமையாக விசாரிக்க பல மாதங்கள் ஆகும் என்று அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில், கணினிகள், தொலைபேசிகள் மற்றும் 15 வெளிப்புற சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ஒரு ஹார்ட் டிரைவில் (Hard Drive) சுமார் 13,000 வீடியோக்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து, 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஓக்லாண்ட் கவுண்டி சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Aug 22, 2024 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).