North Koreans Fighting For Russia: ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா.. தீவிரமாகும் உக்ரைன் போர்..!

ரஷ்யாவுடன் சேர்ந்து வடகொரியா வீரர்கள் உக்ரைனில் போரிடும்போது, பல வடகொரியா வீரர்கள் கொல்லப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

North Koreans Fighting For Russia (Photo Credit: @JilbertTimbol X)

அக்டோபர் 09, சோல் (World News): வடகொரிய வீரர்கள் (North Korea) ரஷ்ய வீரர்களுடன் சேர்ந்து உக்ரைனில் (Ukraine) போரிடக்கூடும் என்றும், சிலர் ஏற்கனவே கொல்லப்பட்டதாகவும், மேலும் பல வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தென்கொரிய தற்காப்பு அமைச்சர் நேற்று (அக்டோபர் 08) தெரிவித்தார். Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்.. பாம்பு தீவு அருகே தீவிரமாகும் மோதல்..!

கடந்த அக்டோபர் 03-ஆம் தேதி அன்று, டொனெட்ஸ்க் அருகே ரஷ்ய (Russia) ஆக்கிரமிப்பு பகுதியின் மீது உக்ரேனிய ஏவுகணை தாக்குதலில் 6 வடகொரிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவித்தன. உக்ரேனில் வடகொரிய அதிகாரிகள் மற்றும் வீரர்களிடையே உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று அவர் கூறினார்.

ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு ஆதரவாக வடகொரியா மேலும் பல வீரர்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். வழக்கமான வீரர்களை அனுப்பி வைப்பதில் உள்ள சிக்கலுக்கு, ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான ராணுவ கூட்டணியைப் போன்ற இருதரப்பு ஒப்பந்தங்கள் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement