ஜனவரி 02, டோக்கியோ (World News): ஜப்பான் நாட்டின் கடலோர காவல் படை விமானம், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மீது மோதி உள்ளது. இதனால் ஏர்லைன்ஸ் விமானம் (Japan Airlines) தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து தீ பற்றிய விமானமானது, டோக்கியோ ஹனேடா விமான ஓடு பாதையில் சென்றுள்ளது. இந்த வீடியோவானது (Japan- Plane On Fire Video), தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 367 பேர் பயணித்திருந்தனர். அந்த விமானம் தரையிறங்கியதும் பயணிகள் விமானத்தில் இருந்து விரைவாக ஓட ஆரம்பித்தனர். இச்சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. First EV With Sodium Battery: சோடியம் அயன் பேட்டரி கொண்ட முதல் இ-கார்.. மாஸ் காட்டும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்..!
BREAKING: Plane on fire at Tokyo International Airport pic.twitter.com/CUeHCx1NYO
— BNO News (@BNONews) January 2, 2024