Man Arrested For Running Naked Inside Flight: ஆடையை அவிழ்த்து போட்டு, விமானத்தில் நிர்வாணமாக ஓடி அதிர்ச்சி தந்த பயணி; நடுவானில் களேபரம்..!

ஆஸ்திரேலியாவில் விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின் உள்ளே திடீரென நிர்வாணமாக ஓடி, பயணிகளுக்கு இடையூறு விளைவித்து, விமானப் பணிப்பெண்ணை இடித்து தள்ளிய அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Man Arrested For Running Naked Inside Flight: ஆடையை அவிழ்த்து போட்டு, விமானத்தில் நிர்வாணமாக ஓடி அதிர்ச்சி தந்த பயணி; நடுவானில் களேபரம்..!
Virgin Australia (Photo Credit: Wikipedia)

மே 29, பெர்த் (World News): ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் விமான நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 'விர்ஜின் ஆஸ்திரேலியா' (Virgin Australia) விமானம் மெல்போர்ன் நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் விமானத்தின் உள்ளே ஒரு நபர் நிர்வாணமாக (Naked) ஓடி, சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளார். மேலும், மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, விமான பணிப்பெண்ணை இடித்து கீழே தள்ளியுள்ளார். இதனால், விமானத்திற்குள் சற்று நேரம் பதற்றம் நிலவியது. Sundakkai Benefits: சுண்டைக்காய் செடியில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

இந்த குழப்பம் காரணமாக, 'விஏ696' விமானம் பெர்த் விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது. இதனிடையே, விமானி இச்சம்பவம் குறித்து பெர்த் விமானம் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய விமான நிலைய காவல் அதிகாரிகள் காத்திருந்தனர். விமானம் வந்தவுடன் சர்ச்சைக்குரிய அந்த நபரை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக, வருகின்ற ஜூன் மாதம் 14-ஆம் தேதி அன்று பெர்த்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த நபருக்கு காவல்துறையினர் சார்பில் நோட்டீஸ் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. மேலும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தது. சர்ச்சைக்குரிய அந்த நபரால் விமானம் 28 நிமிடங்கள் தாமதமாக, மீண்டும் மெல்போர்ன் நோக்கி பயணத்தைத் தொடங்கியது.

(The above story first appeared on LatestLY on May 29, 2024 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).