Nepal Flight Crash Vidoe: நேபாளத்தில் பயணிகள் விமான விபத்தில் 72 பேர் பலி..! இறுதிநேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்.!
நேபாள விமான விபத்தின் இறுதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஜனவரி 16: நேபாள நாட்டில் உள்ள போக்ரா (Pokhara, Nepal) விமான நிலையத்திற்கு விமானிகள், பணியாளர்கள் உட்பட 72 பயணிகளுடன் பயணம் செய்த சிறிய ரக விமானம், (Passenger Plane Crash 72 Died )விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 ரஷியர்கள், 2 கொரியர்கள், அர்ஜென்டினா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். Baby Died: தண்ணீர் பத்திரத்திற்குள் விழுந்து ஒருவயது பச்சிளம் குழந்தை பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்..!
விமான விபத்து உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கர விபத்து என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், விமானம் போக்ரா விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமானம் போக்ரா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பு சில இளைஞர்கள் விமானம் தரையிறங்குவதை நேரலையில் பதிவு செய்துள்ளனர். அதனைதொடர்ந்தே விமான விபத்து நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த இந்தியர்களாக அபிஷேக் சிங் குஷ்வாஹா (வயது 23), அணில் ராஜபார் (வயது 28), சோனு ஜெய்ஸ்வால் (வயது 29), விஷால் ஷர்மா (வயது 23) ஆகிய 4 இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை: கீழ்காணும் வீடியோ நேரலையில் இருந்து எடுக்கப்பட்டது. இழகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.