PM Modi France Visit France Honors (Photo Credit: ANI)

ஜூலை 14, புதுடெல்லி (New Delhi): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டுக்கு (PM Modi France Visit) அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (ஜூலை 14) பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கௌரவ விருந்தினராகவும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

இந்த பயணத்தின்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரெஞ்சு உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்வும் நடைபெறுகிறது. அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பிரான்சில் வசித்து வரும் இந்திய மக்களிடையையே உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளும் இந்தியாவுக்கு ஈர்க்க திட்டமிட்டுள்ளன. Chinmayi Sripaada: பாலியல் புகாருக்கு உள்ளாகியவருக்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்துவதா?; வைரமுத்து விவகாரத்தில் சீறிப்பாயும் சின்மயி.!

இந்நிலையில், பிரான்ஸ் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடிக்கு Grand Cross of the Legion எனப்படும் உயரிய விருதை வழங்கினார்.

France Honor (Photo Credit: ANI)

Grand Cross of the Legion விருது அந்நாட்டில் இராணுவம் உட்பட முக்கிய உயர்பதவிகளில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விருது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இந்திய பிரதமருக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதை பெற்றுக்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் சார்பாக தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். விருது வழங்கும் நிகழ்வு ஏழிசி அரண்மனையில் வைத்து நடைபெற்றது.