Russia-Ukraine War: "ரஷ்யாவுக்கு பதிலடி கொடுப்போம்" சூளுரைத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி..!

உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர்.

Ukraine President Volodymyr Zelensky (Photo Credit: ZelenskyyUa X)

செப்டம்பர் 04, மாஸ்கோ (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தார். Mountain Climbing: 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பிரபலம்.. மலையேற்றத்தில் நடந்த சோகம்..!

இதனிடையே, உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் “உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷ்யாவுக்கு கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement