மே 22, பேங்காக் (World News): சிங்கப்பூரில் இருந்து லண்டன் (Singapore to London Flight) நோக்கி, நேற்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines Boeing 737 SQ321) நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 எஸ்க்யூ 321 விமானம் பயணம் செய்தது. விமானத்தில் 173 பயணிகள் மற்றும் 18 விமான குழுவினர் பயணம் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட விமானம், மொத்தமாக 211 உயிர்களை சுமந்து பயணத்தை தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி காலை 05:00 மணிக்கு மேல் (இந்திய நேரப்படி 02:35 அதிகாலை) பயணம் தொடங்கி இருக்கிறது. நடுவானில் விமானம் தரையில் இருந்து 7,000 அடி உயரத்தில் இந்திய பெருங்கடலில் (Indian O) பயந்துகொண்டு இருந்தபோது, திடீரென டர்பலன்ஸ் என்பதும் காற்று சுழற்சியில் சிக்கி இருக்கிறது. இதனால் பயணிகள் அனைவரும் நிலைகுலைந்துபோன நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 73 வயது முதியவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 30 க்கும் மேற்பட்ட பயணிகள் காயத்துடன் அவதிப்பட்டனர். இதனால் உடனடியாக விமானம் பேங்காங்குக்கு மீண்டும் அவசர நிலையில் தரையிறக்கப்பட்டது. Dog Died in Classroom: அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் தனியே சிக்கிய நாய் பலி; தாகம், பசியால் சோகம்..!
அவசர உதவி எண் & பயணித்தவர்கள் விபரம்: காற்று சுழற்சி, காற்று கொந்தளிப்பு, புயல் வானிலை காரணமாக விமானம் நடுவானில் சிக்கிய நிலையில், நல்வாய்ப்பாக பெரும் விபத்து ஏதும் ஏற்படவில்லை. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து உறவினர்கள் தெரிந்துகொள்ள +65 6542 3311 (சிங்கப்பூர்), 1800-845-313 (ஆஸ்திரேலியா) மற்றும் 080-0066-8194 (இங்கிலாந்து) என்ற அவசர எங்களுக்கு தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 56 ஆஸ்திரேலியர்கள், 41 சிங்கப்பூர் நாட்டவர்கள், 23 நியூசிலாந்து நாட்டவர்கள், 47 அமெரிக்கர்கள், உட்பட 3 இந்தியர்களும் அடங்குவார்கள். நல்வாய்ப்பாக விமானம் நடுவானில் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டாலும் பெரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்படவில்லை. காயமடைந்த 30 பேரில் சிலரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
Aftermath of Singapore Airlines flight 321 from London to Singapore which had to divert to Bangkok due to severe turbulence. One death passenger and several injured. Blood everywhere, destroyed cabin. #singaporeairlines #sq321 pic.twitter.com/C2FgrVt9yv
— Josh Cahill (@gotravelyourway) May 21, 2024
விமானம் நிலைகுலைந்ததன் வீடியோ:
#VIDEO // Las fuertes turbulencias en un vuelo de Singapore Airlines de #Londres a #Singapur causaron la muerte de un pasajero y dejaron a más de 30 personas heridas. 👇🏻 pic.twitter.com/IFOTazJ5lc
— Janeth León M () May 21, 2024