Sri Lanka Presidential Election 2024: இலங்கை அதிபர் தேர்தல்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Sri Lanka Presidential Election 2024: இலங்கை அதிபர் தேர்தல்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Sri Lanka Presidential Election (Photo Credit: @SriLankaTweet X)

ஜூலை 26, கொழும்பு (World News): கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று, கோத்தபய ராஜபட்ச அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இந்த நிலையில், அவரின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவடைகிறது. இதனையொட்டி அதிபர் தேர்தலுக்கான (Sri Lanka Presidential Election) தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Chinese Toddler's Construction Skills: சீன குழந்தைகளை பார்த்து கத்துக்கனும்யா... விடுமுறையில் இப்படியும் நெகிழ்ச்சி செயல்.!

அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ளன. அதில் 196 பேர் தேர்தல் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 11:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).