Social Media Ban: 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. என்ன காரணம் தெரியுமா..?

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை அமல்படுத்த அந்நாட்டு அரசு முயற்சி எடுத்து வருகிறது.

Social Media Ban: 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. என்ன காரணம் தெரியுமா..?
Social Media (Photo Credit: Pixabay)

நவம்பர் 07, கான்பெர்ரா (World News): ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை (Social Media) பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் (PM Anthony Albanese) தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் தங்கள் நாட்டில் உள்ள குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் இன்னும் 12 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். Donald Trump Statue: அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப்.. இந்தியாவில் சிலை வைத்து கொண்டாட்டம்..!

இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். மேலும், இதில் பெற்றோர்கள் அனுமதி பெற்றாலும் விலக்கு அளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் அணுகலைத் தடுக்க, தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டுவது சமூக ஊடகத் தளங்களின் பொறுப்பாகும். அது பெற்றோர், இளையோரின் கடமை அல்ல எனவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட தளங்களில், ‘மெட்டா’வின் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், டிக்டாக், எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ ஆகியவை அடங்கும் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மிஷெல் ரோலண்ட் கூறியுள்ளார். ‘அல்ஃபபெட்’ நிறுவனத்தின் யூடியூப் தளமும் சட்டத்தின் வரம்பிற்குள் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Nov 07, 2024 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).