ஏப்ரல் 11, அமெரிக்கா (Portland): உலகம் தொடங்கி மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கிடைத்ததில் இருந்து அவன் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறான். இன்றளவில் ஏலியன், வேற்றுகிரகம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அவை குறித்த கேள்விகளுக்கு இன்று வரை மர்மங்களே விடையாக கிடைத்துள்ளன.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ள வானியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் வேற்றுகிரக வாசிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது அங்குள்ள வானில் தோன்றும் பல மர்மங்கள் வீடியோ ஆதாரத்துடன் வெளியானாலும், அவை குறித்த சரியான விளக்கங்கள் இன்று வரை கிடைக்கப்பெறவில்லை. Shriya Saran: தாயான பின்பு ஸ்ரேயா சரண் வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ்; எப்படி சூப்பராக இருக்காங்க பாருங்களேன்.!
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணம், போர்ட்லேண்ட் (Portland, Oregon) நகரில் வானில் இரண்டு நட்சத்திரங்களை போல வெளிச்சம் கொண்ட சிறிய அளவிலான வெளிச்சம் அதிவேகத்துடன் நகர்ந்து சென்றது. இதனைக்கண்ட பலரும் அவை வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டுகளாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
கீழ்காணும் வீடியோ கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்றாலும், அன்றைய நாளை போல இன்றும் வானில் மாற்றங்கள் தென்பட்டன என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த தகவல்கள் அரசாலும், ஆய்வாளர்களாலும் சோதிக்கப்பட்டு வருகிறது.