UK Air Travel Disrupted: தொழில்நுட்ப கோளாறினால் முடங்கியது விமான சேவை; பயணிகள்-விமான நிலைய அதிகாரிகள் கவலை.!

கணினியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு கோளாறு காரணமாக விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் - விமானிகளுக்கு வழிகாட்டுதல்களை பகிர இயலாமல் அவதிப்பட்டனர்.

UK Air Travel Disrupted: தொழில்நுட்ப கோளாறினால் முடங்கியது விமான சேவை; பயணிகள்-விமான நிலைய அதிகாரிகள் கவலை.!
Flight (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 28, பிரிட்டன் (World News): ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன் நாட்டில், விமான போக்குவரத்து சேவை என்பது இன்றியமையாதது. ஏனெனில் அவசர பயணத்தை மேற்கொள்வோரும், பிரிட்டனுக்கு பயணம் செய்யும் சுற்றுலாப்பயணிகளும் விமான போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை பிரிட்டன் விமான போக்குவரத்தில் கோளாறுகள் ஏற்பட்டதால், விமான போக்குவரத்து சேவை முடங்கியது. இதனால் அதிகாரிகள் பிரிட்டனுக்கு வரும் விமானங்களை அண்டை நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 3 Black People Killed: இனவெறியால் மூவர் சுட்டு கொலை: அமெரிக்காவின் ஃப்ளாரிடா மாகாணத்தில் நடந்த பயங்கரம்.!

கணினியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு கோளாறு காரணமாக விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் - விமானிகளுக்கு வழிகாட்டுதல்களை பகிர இயலாமல் அவதிப்பட்டதை தொடர்ந்து, அவசர கால நிகழ்வாக விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

ஒருசில விமானங்களுக்கு மட்டும் அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்க முயன்றது. இந்த தொழில்நுட்ப கோளாறுகளை அதிகாரிகள் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது படிப்படியாக கோளாறுகள் சரி செய்யப்பட்டு, விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

(The above story first appeared on LatestLY on Aug 28, 2023 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).