Donald Trump: தாக்குதலை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

பதற்றத்தை தணித்து எல்லை தாண்டிய தாக்குதலை முடிக்க இந்தியா - பாகிஸ்தான் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Donald Trump: தாக்குதலை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!
Donald Trump / Narendra Modi (Photo Credit: Facebook)

மே 10, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் காரணமாக இருநாடுகளின் எல்லைப்பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்‌. பயங்கரவாதிகளுக்கு துணையாக இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி போரைத்தொடங்கியது.

இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு பதிலடி :

இந்தியா தனது படை பலத்தை காண்பித்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பும் தற்போது சரிக்கு சமமாக மோதி வருகிறது. மேலும் இந்தியாவின் மீதும், இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் எந்த தாக்குதலும் இனி போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயலை முன்னெடுக்கும் அமைப்புகள், நாடுகள் மீது கடுமையான பதிலடி நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை :

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எல்லைதாண்டிய தாக்குதல் மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வர இரவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு நாடுகளும் தாக்குதல் விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது‌. இந்தியா, பாகிஸ்தான் எடுத்த அமைதி முயற்சிக்கு நன்றி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மீண்டும் தாக்குதல் நடந்தால் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா அறிவித்து இருக்கிறது.

ட்ரம்பின் இணையதள பதிவு :

(The above story first appeared on LatestLY on May 10, 2025 06:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).