Hero Xtreme 125R Launched: ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 125ஆர்.. இவ்வளவு விலை குறைவா?.!

ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 125ஆர் என்ற 125 சிசி பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

Hero Xtreme 125R Launched: ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 125ஆர்.. இவ்வளவு விலை குறைவா?.!
Hero Xtreme 125R (Photo Credit: @HeroMotoCorp X)

ஜனவரி 24, புதுடெல்லி (New Delhi): ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 125ஆர் என்ற பைக்கை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் சிறந்த பெர்பார்மன்ஸ் கொண்ட பைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் புக்கிங் நேற்றிலிருந்து துவங்கி உள்ளது. மேலும் இந்த பைக்கின் டெலிவரியானது வரும் பிப்ரவரி மாதம் 20ம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Beauty Parlour Owner Damaged Customer Ear: காதின் ஓட்டையை அடைக்க சென்ற பெண்... காதை அழுக வைத்த அனுப்பிய பார்லர் உரிமையாளர்..!

இந்த பைக்கில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளன. இது இரவு நேரங்களில் சிறப்பான வெளிச்சத்தை வழங்கும் . இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை ஸ்பிரிண்ட் இபிடி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 66 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். இந்த பைக்கின் விலை ரூபாய் 95,000 முதல் 99,000 வரையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 24, 2024 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).