ஜனவரி 24, சென்னை (Chennai): சென்னை அருகம்பாக்கம் அருகே பெண் ஒருவர் பார்லர் சென்றுள்ளார். அவரின் காது ஓட்டை பெரியதாக இருந்துள்ளது. அதனை பார்த்த பார்லர் உரிமையாளர், அதனை அடைத்து தருவதாக கூறியுள்ளார். அவரின் வார்த்தைகளை நம்பி காதினை கொடுத்த பெண்ணிற்கு சில நாட்களிலேயே காதில் இருந்து தண்ணீராக வந்துள்ளது. அவர் பார்லர் உரிமையாளரிடம் சென்று கேட்க, அவருக்கும் அது என்னவென்றே தெரியவில்லை. பின்னர் இருவரும் இணைந்து காது மருத்துவரிடம் சென்றுள்ளனர். அங்கு அவர்களோ காது அழுகிவிட்டது, அதனை நீக்கி ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தொடர்ந்து பார்லர் உரிமையாளர் மருத்துவ செலவுகள் அனைத்தையும் தான் எடுத்துக் கொள்கின்றேன் என்று பேசி, காவலர்களிடம் புகார் அளிக்க விடாமல் அப்பெண்ணை தடுத்துள்ளார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு பார்வையாளர் மருத்துவ செலவுகளை கண்டு கொள்ளாமலும், அப்பெண்ணின் அழைப்பு மற்றும் மெசேஜ்களை கண்டு கொள்ளாமலும் விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் பார்லர் உரிமையாளர் மீது அருங்கபாக்கம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். Korattur Accident: சிக்னலை மதிக்காத சென்னை மாநகர பேருந்து ஓட்டுனரால் சோகம்; தலைநசுங்கி இளம்பெண் உயிரிழப்பு.!
காதின் ஓட்டையை அடைக்க சென்ற பெண்ணின் காது முழுவதுமாக அழுகிய இச்சம்பவம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நம் உடலில் பிரச்சனை என்றால் அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களையும் நாம் அணுக வேண்டும். இது போன்று பார்லரில் இருப்பவர்களை அணுகும் பொழுது அவர்களுக்கு முறையான மருத்துவங்கள் எதுவும் தெரியாமல் ஏதேனும் செய்வதினால் அவதிப்படுவது நாம் தான். தற்போது கூட தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பலர் பார்லர்களையே அணுகுகின்றனர். ஆனால் முறைப்படி தோல் மருத்துவர்களை அணுகுவதே நல்லது.