Mercedes-Benz GLA Facelift: பிராண்ட் நியூ பென்ஸ் கார்... வெறும் ரூ.50 லட்சத்தில் அறிமுகம்.!!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 ஜி.எல்.ஏ ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): உலகளவில் பிரபலமான லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம். இந்த நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 ஜி.எல்.ஏ ஃபேஸ்லிஃப்ட் (GLA Facelift) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.50.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. Homemade Horlicks Powder: வீட்டிலேயே ஹார்லிக்ஸ் பவுடர் தயார் செய்வது எப்படி? இதை கண்டிப்பாக செய்து பாருங்கள்..!
சிறப்பம்சங்கள்: ஜி.எல்.ஏ, ஜி.எல்.ஏ 200டி மற்றும் ஜி.எல்.ஏ 200டி 4மேட்டிக் என 3 விதமான வேரியண்ட்களில் இந்த கார் கிடைக்கும். புதிய அப்டேட்களாக புதிய டிசைனில் ஹெட்லைட்ஸ், எல்இடி டிஆர்எல்-கள், அப்டேட்டட் எல்இடி டெயில்லைட்ஸ் உள்ளிட்டவை புதிய ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன. ஃப்ளேட்-பாட்டம் ஸ்டேரிங் சக்கரம் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் டேஸ்போர்டில் ஃபாக்ஸ்-ஃபைபர் ட்ரிம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காரில் 360-டிகிரி கேமரா வழங்கப்பட்டுள்ளதால், காரை எளிதாக பார்க் செய்யலாம்.