Horlicks Powder (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 01, சென்னை (Chennai): பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளுக்கென்று விற்பனை செய்யப்படும் ஹார்லிக்ஸ் பவுடரை வாங்கி பாலில் கலந்துக் கொடுப்பார்கள். அவை எவ்வளவு ஆரோக்கியத்தை தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதனால், வீட்டிலேயே ஹார்லிக்ஸ் தயார் செய்து கொடுக்கலாம். அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பால் பவுடர் - 1/2 கப்

முளைக்கட்டிய முழு கோதுமை - 1 கப்

பாதாம் - 1/2 கப்

முந்திரி - 1/2 கப்

பிஸ்தா - 1/2 கப்

செய்முறை: முதலில் கோதுமையை எடுத்து நன்றாக கழுவி கொள்ள வேண்டும். பின்னர், அதில் தண்ணீர் சேர்த்து 7 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டிவிட்டு, வெள்ளை துணியில் கோதுமையை போட்டு கட்டி, எதிலாவது தொங்கவிடவும். காலையும் மாலையும் கோதுமை இருக்கும் துணியின் மேல், லேசாக தண்ணீர் தெளித்து விடவும். 2 நாள் வரை இப்படி செய்யலாம். 4 நாளில் கோதுமை முளைவிட்டிருக்கும். Global Corruption Index 2023: சர்வதேச ஊழல் குறியீட்டு பட்டியல்.. முதல் இடத்தில் இருக்கும் நாடு எது?.!

4வது நாளில் முளைவிட்ட கோதுமையை போட்டு நன்றாக உலரவிடவும். இப்போது, பாதாம், முந்திரி, பிஸ்தா மூன்றையும் தனித்தனியாக வாணலில் கொட்டி, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மூன்றையும் வறுத்தபிறகு, ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும். பின்னர், உலர்ந்த முளைக்கட்டிய கோதுமையை மிக்ஸி ஜாரில் போட்டு அதையும் பவுடராக அரைத்து கொள்ளவும்.

இப்போது அரைத்த இந்த பவுடரை ஒன்றாக கலந்து சல்லடையில் சலித்து எடுக்கவும். அதன்பின் அதனுடன் வெல்லம் மற்றும் பால் பவுடர் சேர்த்தால் ஹார்லிக்ஸ் பவுடர் தயார்.