Jawa 350: ஜாவா 350 மோட்டார்சைக்கிள் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?.!

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் அதன் புதிய ஜாவா 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Jawa 350: ஜாவா 350 மோட்டார்சைக்கிள் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?.!
Jawa 350 (Photo Credit: @jawamotorcycles X)

ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Motorcycles) நிறுவனம் புதியதொரு 350சிசி பைக்கான, ஜாவா 350 பைக்கை (Jawa 350) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.15 லட்சமாக நிர்ணயிக்கபட்டுள்ளது. மேலும் பைக்கில் 334சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. NITI Aayog- Decline In Poverty: கடந்த 10 ஆண்டுகளில் 24 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிப்பு.. மத்திய அரசின் சரித்திர சாதனை.. நிதி ஆயோக் அறிவிப்பு.!

புதிய ஜாவா 350 பைக்கின் நீளம் 790மிமீ ஆகும். அதனால் பைக்கின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் சற்று அதிகமாக 1,449மிமீ ஆக உள்ளது. மேலும் பைக்கின் எடை 194 கிலோ ஆகும். இந்த பைக்கில் நன்கு அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஜாவா 350 பைக்கில் டயர்கள் வித்தியாசமான பேட்டர்னில் பொருத்தப்பட்டுள்ளன.

(The above story first appeared on LatestLY on Jan 15, 2024 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).