Royal Enfield Guerrilla 450 Launch: ராயல் என்பீல்டு கொரில்லா 450 வெளியீடு.. அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்று தனது கொரில்லா 450 என்ற பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலை 17, புதுடெல்லி (New Delhi): ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புதுமுக நியோ-ரெட்ரோ நேக்கட் ரோட்ஸ்டர் (Neo-retro naked roadster) ரக பைக் மாடலான "கொரில்லா" (Guerrilla) பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் கருப்பு ஃபோர்க் கெய்ட்டர்களுடன் கூடிய வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கின்றது. 452 சிசி திரவ-குளிரூட்டப்பட்ட ஒற்றை சிலிண்டர் டிஓஎச்சி (DOHC) எஞ்சினே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், வட்ட வடிவ கண்ணாடிகள், எல்இடி ஹெட்லைட், மிதக்கின்ற ஸ்டைலிலான வட்ட வடிவ டிஎஃப்டி கிளஸ்டர், அகலமான ஹேண்டில்பார என ஏராளமான அம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கும். இதற்கு அறிமுக விலை ரூ. 2.39 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். TN Weather Update: கொட்டப்போகும் மழை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!