OnePlus 15 Series (Photo Credit : @oneplus X)

நவம்பர் 08, சென்னை (Technology News): ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தொடரான OnePlus 15 Series நவம்பர் 13ஆம் தேதி உலகளவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த மாடல் இதுவரை வழங்கப்பட்ட எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இல்லாத புதிய டிரிப்பிள்-சிப் கட்டமைப்பை கொண்டிருக்கிறது. அதன்படி அதிக செயல்திறனுக்கான சிப், உடனடி பதில் அளிக்கும் வகையில் டச் ரெஸ்பான்ஸ் சிப் மற்றும் வைஃபை சிப் ஆகிய மூன்றும் இருக்கின்றன. இதனால் பயனர்களுக்கு எளிமையான அனுபவத்தை வழங்க இயலும். OnePlus 15 ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில் 6.78 இன்ச் பரப்பளவு கொண்ட 1.5K 165Hz ஸ்மூத் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் புதிய Snapdragon 8 Elite Gen 5 Processor மூலம் உயர்தர செயல்திறனும், கேமிங் முதல் பல செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் திறனும் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்போன் சிறப்பம்சங்கள்:

கடந்த களங்களில் ஒன்பிளஸ் ஸ்மார்போன்களின் பேட்டரி திறனானது சற்று குறைவாக இருக்கும். அதனை சரிசெய்யும் பொருட்டு இந்த முறை ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒன்பிளஸ் மாடலிலும் வழங்கப்படாத 7300mAh சிலிக்கான் நானோஸ்டாக் பேட்டரி இதில் இணைக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் வசதியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 120W SuperVOOC வயர்டு சார்ஜிங் மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மிகக் குறுகிய நேரத்தில் முழு சார்ஜை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. YouTube Update: குட் நியூஸ்.. யூடியூப் கொண்டு வரும் ரகசிய அப்டேட்.. புதிய AI மாற்றம்.! 

விரைவில் இந்தியாவில் அறிமுகம்:

இந்த OnePlus 15 ஸ்மார்போன் தொடரின் வெளியீட்டு விழா வரும் நவம்பர் 13ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியிடப்படும் என நிறுவதத்தின் தரப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதே நாளில் இரவு 8 மணி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும். வழக்கமாக இது Amazon, OnePlus இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.