Jana Nayagan Movie (Photo Credit : @CcInfilmin / @KvnProductions X)

ஆகஸ்ட் 24, சென்னை (Cinema News): சதுரங்க வேட்டை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்த எச்.வினோத் தற்போது நடிகர் விஜயை வைத்து ஜனநாயகன் (Jana Nayagan Movie) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி உட்பட பலரும் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். அரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய் இறுதியாக நடித்துள்ள இப்படம் அரசியல் சார்ந்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாகும் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் :

இந்த படத்துக்கு பின் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு முழு நேர அரசியல் பணியிலும் அவர் களமிறங்க உள்ளார். இப்படம் 2026 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இயக்குனர்கள் அட்லி லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. Captain Prabhakaran: கேப்டன் விஜயகாந்தை கண்டதும் கதறி அழுத பிரேமலதா, விஜய பிரபாகரன்.. கண்கலங்க வைக்கும் வீடியோ.! 

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் தமிழ் பிரபலங்கள்?

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அதற்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், சூர்யா, அஜித் உட்பட பலரை அழைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் கடைசி படம் இது என்பதால் அஜித்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் இணையத்தில் லீக்கான இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.