Best Selling Motorcycles: அதிகமாக விற்பனையான பைக்குகளின் பட்டியல்.. எந்த பைக் முதலிடம் தெரியுமா? உங்களுக்காக லிஸ்ட் இதோ.!

இந்தியாவில் சமீபத்தில் அதிகமாக விற்பனையான பைக்குகளின் பட்டியல் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Best Selling Motorcycles: அதிகமாக விற்பனையான பைக்குகளின் பட்டியல்.. எந்த பைக் முதலிடம் தெரியுமா? உங்களுக்காக லிஸ்ட் இதோ.!
2024 Hero Xtreme 160R 4V (Photo Credit: @carandbikehindi X)

ஜனவரி 29, புதுடெல்லி (Automobile News): பைக்குகள், அவர்களின் நம்பிக்கை, செயல்திறன் மற்றும் மைலேஜ் காரணமாக இந்தியாவில் அதிகமாக விற்பனையாகின்றன. அந்த வகையில் இந்தியாவில் சமீபத்தில் அதிகமாக விற்பனையான பைக்குகளின் பட்டியல் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்

இது வரை அதிகமாக விற்பனை பைக்காக இருக்கிறது இந்த ஸ்பிளண்டர் பிளஸ். ஹீரோ ஸ்பிளண்டர் வகை பைக்குகள் 2,61,833 யூனிட் விற்பனையாகியுள்ளது. இதன் எக்ஸ்க்ஷோரூம் விலை ரூ. 72,226 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 5 வேரியண்டுகளில் கிடைக்கிறது. ஆன் ரோட் விலையாக இதன், Hero Splendor Plus Self with Alloy Wheel - ₹86,898, Hero Splendor Plus Black and Accent - ₹.87,533, Hero Splendor Plus Self with Alloy Wheel and i3S - ₹.88,062, Hero Splendor Plus Matt Shield Gold - ₹ 89,813, Hero Splendor Plus XTEC - ₹.92,187 என விற்பனையாகிறது. Inverter Buying Guide: இன்வெட்டாரால் இனி இல்லை மின்வெட்டு.. இன்வெட்டர் வாங்கும் முறைகள் இதோ.!

பஜாஜ் பல்சர் 150

இந்த பஜாஜ் பலசர் 150 அதிகமாக விற்பனையான பைகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது 149.5 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது லிட்டருக்கு 47.5 கி,மீ மைலேஜை தருவதால் தினமும் வேலைக்கு செல்வோரை தன் பக்கம் ஈர்த்து விற்பனையாகியுள்ளது. டியூப் இல்லதா ஆலாய் வீல்கலைக் கொண்டுள்ளது. 15 லிட்ட்ர் பெட்ரோல் டேங்கியும் கொண்டுள்ளது. பல்சர் 150 சிங்கள் டிஸ்க் மற்றும் பலசர் 150 டுவின் டிஸ்க் என முறையே ₹.1.16 மற்றும் ₹.1.19 லட்சம் என விற்பனையாகிறது.

பஜாஜ் பல்சர் NS200

அடுத்தும் பஜாஜின் பலசன் என்200 அதிகம் விற்பனையாகி வருகிறது. 199 சிசி எஞ்சின் கொண்ட இது 40.84 கி.மீ மைலேஜைத் தருகிறது. மேலும் டியூப்ல்ஸ் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்கையும் கொண்டு 4 வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்ஷோரூமின் விலை 1.41 லட்சமாக STD என்ற ஒரே மாடலில் விற்பனையாகி வருகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).