Inverter Buying Guide: இன்வெட்டாரால் இனி இல்லை மின்வெட்டு.. இன்வெட்டர் வாங்கும் முறைகள் இதோ.!

உங்களுக்கு ஏற்ற இன்வர்ட்டர் எது? எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது? என்பதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.

Inverter Buying Guide: இன்வெட்டாரால் இனி இல்லை மின்வெட்டு.. இன்வெட்டர் வாங்கும் முறைகள் இதோ.!
Inverter (Photo Credit: Pixabay)

ஜனவரி 29, புதுடெல்லி (Technology News): அடுத்து ஓரிரு மாதங்களில் மாதங்களில் கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிடும். அத்துடன் மின்வெட்டும் தினசரி நிகழ்வாகிவிடும். கோடை வெயில் பாதிப்பை அதிகப்படுத்துவதுடன், தேர்வுக்கு தயாராகும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளில் படிப்பையும் மின்வெட்டு பாதிக்கலாம். ஆகவே, வரப்போகும் மின்வெட்டை சமாளிக்க நீங்கள் இப்போதே தயாராகிவிடுவது நல்லது. இதற்கு நல்லதொரு தீர்வாக, இன்வர்ட்டர் உதவும். உங்களுக்கு ஏற்ற இன்வர்ட்டர் எது? எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது? என்பதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.

இன்வெர்ட்டரின் வகைகள்:

பொதுவாக மூன்று வகை இன்வெட்டர்கள் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அவை,

பியூர் சைன் வேவ் இன்வெர்ட்டர் (Pure sine wave inverter): இந்த வகை இன்வட்டர்கள் வீடு மற்றும் பணி இடங்களுக்கு ஏற்றது. மின்வோல்டேஜ் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இயக்க ஃபார்முலாவை கொண்டு எந்த நேரத்திலும் தன் தேவைக்கேற்ப மாற்றிகொள்ளும் திறன் பெற்றுள்ளது. இதன் விலை அதன் நிறுவனத்திற்கேற்ப ₹ 4000 முதல் ₹ 24,000 வரை உள்ளது. China’s Artificial Sun: சூரியனுக்கே போட்டி! சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பம்.. செயற்கை சூரியனை உருவாக்கியுள்ள சீனா..!

மாடிஃபைட் சைன் வேவ் இன்வெர்ட்டர் (Modified sine wave inverter):

இந்த வகை இன்வெர்ட்டர்கள் ஸ்டார்ட் ஆவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டாலும், நீண்ட நேரம் செயல்படக் கூடியது. இதன் விலை குறைந்தபட்சமாக ₹ 7000 முதல் பிராண்டுகளுக்கு ஏற்ப விற்கப்படுகிறது.

ஸ்கொயர் வேவ் இன்வெர்ட்டர் (Square wave inverter):

மற்ற இன்வெர்ட்டர்களை ஒப்பிடும்போது, ஸ்கொயர் வேவ் இன்வெர்ட்டர்கள் குறைவான செயல் திறன், ஆற்றலைக் கொண்டது.மேலும், குறைவான விலை கொண்டவை. மேலும் அவை மின் அலைகளை கையாள்வதில் சிறந்தவை இதன் விலை குறைந்தபட்சமாக ₹ 5000 வரை ஆரம்பமாகிறது.

இதையெல்லாம் கவனிங்க...

  • உங்களுக்கு எவ்வளவு மின் ஆற்றல் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
  • இன்வெர்ட்டரின் பேட்டரிகளின் செயல்திறனை ஆராய்த்து கொள்ளுங்கள்.
  • இன்வெர்ட்டரின் வோல்ட் ஆம்பியர் (VA) மதிப்பீட்டை ஆராய்ந்து கொள்ளுங்கள்.
  • எந்த வகை இன்வெர்ட்டர் வாங்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
  • இன்வெர்ட்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று வயரிங்.
  • வயரிங் அமைக்கும் போது அதிக மின் ஆற்றல் தேவைப்படும் உபகரணங்களைத் தவிர்ப்பது நல்லது.
  • உங்கள் இன்வெர்ட்டர் , 15 முதல் 50 வாட் ஆற்றல் கொண்டிருந்தால், அது சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்.
  • இன்வெர்ட்டர் வாங்கும்முன் டெக்னீஷியனிடம் கலந்தாலோசித்து தீர்மானிப்பது நல்லது .

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).